Posted on 2:30 AM by நிமல்-NiMaL

Hope - சுற்றும் காற்றுக்கு சுதந்திரம், நம் சிட்டுக்குருவிக்கு ஏன் இல்லை

அண்மைக்காலமாக பதிவுகள் எழுத நேரமும் இல்லை, எண்ணமும் இல்லை. ஆனால் நண்பன் சாய் சிவாவின் இந்த பாடலை கேட்டதிலிருந்து இதை பதிவில் பகிரவேண்டும் என்று தோன்றியது. பாடலை கேட்டு, உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்....

பாடல் கேட்பதற்கு...

Artist : Sai Shiva & Vijay
Lyircs : Sai Shiva
Music Produced and Arranged by : Sai Shiva

வரிகள் மீள வாசிப்பதற்கு...
நேற்று உன் தினம்
நாளை சொப்பனம்
நாட்கள் நீளலாம்
காயம் ஆறுமா

எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்ந்தோம்
தாய் மண்ணைத் துறந்தே
இன்று தெருவில் அலைந்தோம்

ஆனா(அ) என்றால் அம்மா என்று
மழலை சொல்ல மறுக்கிறது
காயம் கொண்ட நாள் முதலாய்
அகதி என்று சொல்கிறது

விண்ணை மறைக்க
இரு விரல்கள் போதுமே
நம் கண்ணீர் துடைத்தே
அவை தேய்ந்தே போனதே

சுற்றும் காற்றுக்கு சுதந்திரம்
நம் சிட்டுக்குருவிக்கு ஏன் இல்லை
வட்ட நதிகள் தான் வாழ்க்கையே
நம் நம்பிக்கை இழக்கவில்லை

எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்ந்தோம்
தாய் மண்ணைத் துறந்தே
இன்று தெருவில் அலைந்தோம்

வீடு வாசல் இருந்தும்
மர நிழலில் சரணடைந்தோம்
ஊர்வன உறைவது போலவே
பூமிக்கடியில் வாழ்ந்திருந்தோம்

அன்னை அணைந்த
கரங்கள் யாவுமே
நம் கவலை துவைத்தே
இன்று தேய்ந்தே போனதே

நம் தேசம் விட்டுப் பிரிகையில்
உன் கரகோஷங்களை மறக்கவில்லை
நம்மவர் உயிரைப் பறிக்கையில்
உன் முகத்தின் ரேகைகளை மறக்கவில்லை

நேற்று உன் தினம்
நாளை சொப்பனம்
நாட்கள் நீளட்டும்
நம் காயம் உலகை ஆளட்டும்
This song is dedicated to all the innocent people who lost there lives in the war.

சாய் சிவாவின் ஏனைய பாடல்களையும் கேட்க...

நம்பிக்கை மட்டுமே இனி நம் கையில்...!

---
நிமல்

Posted on 4:30 PM by நிமல்-NiMaL

துருக்கித் தொப்பி யாருக்கு...?



மேலதிக விபரங்கள்: இங்கே

Tags: ICAMES 2009, Turkey, Competition, Project, Selection

Posted on 3:30 PM by நிமல்-NiMaL

கடை மூடும் Geocities - இணையவெளியில் இன்னொரு கருந்துளை

நான் முதல் முதலில் இணையத்தில் கட்டிய வீடு Yahoo இலவசமாக வழங்கும் GeoCities தளத்திலேயே இருந்தது, அது 2000-2001 காலப்பகுதி என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் மின்னஞ்சல், குழுக்கள், தேடல் என்று அப்போது இணையத்தில் பிரபலமாக இருந்த சேவைகள் அனைத்திலும் Yahoo முன்னணியில் இருந்தது. GeoCities இலவசமாக தனிப்பட்ட இணையத்தளங்களை உருவாக்கக்கூடிய ஒரு வழங்கி சேவையாக இருந்தது. ஆனால் இப்போது Yahoo தனது இலவச GeoCities சேவையை இந்த வருடத்துடன் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

We have decided to discontinue the process of allowing new customers to sign up for GeoCities accounts as we focus on helping our customers explore and build new relationships online in other ways. We will be closing GeoCities later this year. -Yahoo!

இணையப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்ங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமையும், வலைப்பதிவுகள், டுவீட்டர் போன்ற சேவைகளை பயனர்கள் நாடுவதும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அத்துடன் Yahoo நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் நிர்வாக நிதிநிலை சிக்கல்களும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இணையத்தளங்கள் பிரபலமடைய ஆரம்பித்த காலப்பகுதியில் தனது சேவைகளை தொடங்கிய GeoCities பலருக்கும் தமது தனிப்பட்ட தளங்களை வைத்திருக்கும் இடமாக இருந்தது. GeoCities ஒரு இணையத்தளம் உருவாக்குவதை பயனருக்கு இலகுவாக்கி domain பதிவு HTML போன்றவை இன்றி இலகுவாக தளங்களை உருவாக்குவதில் முன்னோடியான தளமாகவும் இருந்தது. இதன் காரணமாகவே தமிழிலும் பல நூறு தளங்கள் GeoCitieல் அமைக்கப்பட்டன. நான் இதுவரை இணையத்தில் உலாவும் பல சந்தர்ப்பங்களில் பல பயனுள்ள தமிழ் தளங்கள் GeoCitiesல் கண்டிருக்கிறேன்.

ஆனாலும் GeoCities தளங்களில் பலவும் சாதாரண பயனர்களால் உருவாக்கப்பட்டவையே. முக்கியமாக பல தமிழ் GeoCities தளங்கள் பயனுள்ள தகவல்களை கொண்டிருந்தாலும் அவற்றில் பல தற்போது கவனிப்பாரற்றே இருக்கின்றன. இந்த நிலையில் GeoCities தளம் முடப்படும் போது, இந்த தளங்களும், முக்கியமாக அவற்றில் சேமிக்கப்பட்டுள்ள பல ஆயிரங்கள் வரையான கவிதைகள், கட்டுரைகள் என்பனவும் காணாமல் போகும் நிலையே ஏற்படும்.

ஆகவே நண்பர்களே உங்களின், அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் தளங்கள் ஏதும் இருந்தால் அவற்றையும் வேறு இடங்களுக்கு மாற்றிவிடுங்கள். நான் பார்த்தவரையில் பல நூறு தளங்கள் தமிழில் இருக்கின்றன, அவற்றில் சிலவாவது எஞ்சட்டும்.

இணையத்தின் நிலையாமை பற்றிய இந்த பதிவுகளையும் படிக்கவும்: