இந்த வலைப்பதிவு
தற்காலிகமாக
செயற்பாட்டில் இல்லை.


திங்கள், 24 மார்ச், 2008 / 7:18 PM

போய்வருக தோழனே! - Our dear friend Haresh

நீ மறைந்த சேதி கேட்டு நெஞ்சுடைந்தது!
நீ கலந்த நினைவுகளில் கண்கசிந்தது!
நீ கதைத்த கதைகள் எல்லாம் காதில் கேக்குது!
உன் தோளில் கிடந்த எந்தன் கைவலிக்குது!
பூமலரும் உன்சிரிப்பை விதி அழித்ததா?
பண்பினிலெ சிறந்த உன்னை நாம் இழப்பதா?
பழகிவிட்ட நெஞ்சமுன்னை எண்ணி வாடுது!
விலகிவிட்ட உன்னுயிரின் பின்னேஓடுது!
விழிவழிய மனமழுது விண்ணைப் பார்க்குது!
எழுதவரும் கவிதையிலென் கண்ணீர் சேருது!
நீ் வளர்த்த நட்புஎன்ற பசுமை சிரித்திடும்!
நீங்கிடாது உன்நினைவு! எம்முள் நிலைத்திடும்!
போய்வருக தோழனே! நீ அமைதி கொள்ளுக!
பூங்காற்றாய் எங்கள்நெஞ்சில் என்றும் வீசுக!



நண்பர்கள்,
நாம்...

(கவி் - வி.விமலாதித்தன்)

2 Responses to போய்வருக தோழனே! - Our dear friend Haresh

  1. Athavan
    March 24, 2008 8:19 PM
    உனது பிரிவால் வாடும்
    2004 உயர்தர பிரிவு மாணவர்கள் ஆகிய நாம் கண்ணீர் அஞ்சலியை எமது
    காணிக்கையாக செலுத்துகின்றோம
  2. Divya
    April 5, 2008 1:12 AM
    May his soul rest in peace,

    Deep condolence....

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.