இந்த வலைப்பதிவு
தற்காலிகமாக
செயற்பாட்டில் இல்லை.


புதன், 23 ஏப்ரல், 2008 / 1:40 PM

புத்தம் புதுசு - Facebook Chat


பலராலும் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட Facebook Chat, இப்போது பொதுப்பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

ஜிமெயில் சாட்டை போலவே இருந்தாலும் Facebook நண்பர்களுடன் உரையாட பயனுள்ளதாக இருக்கும்.

கூகுளின் ஓர்கூட்டிலும் விரைவில் இவ்வாறான வசதி வழங்கப்படலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: இணையம், கணனி, Facebook, chat, news, புதுசு

வியாழன், 17 ஏப்ரல், 2008 / 9:45 PM

ப்ளாகரில் Gravatar...!

ப்ளாகர்(Blogger) வலைப்பதிவுகளின் பின்னூட்டங்களில் Gravatar அவதாரங்களை காட்ட இயலாது என்பது அனேக Gravatar பயனர்களுக்கு தெரிந்த்து தான். ஆனாலும் Blogger Profile படமாக Gravatar அவதாரங்களை காட்ட இயலும். நான் செய்து பார்த்தேன், எவ்வாறு என்பதை இங்கு பார்க்கலாம்.

தமிழ்மணம், சற்றுமுன், மற்றும் இதர பல வேட்பிரஸ் வலைப்பதிவுகளும் Gravatar வசதியை கொண்டிருக்கின்றன. ப்ளாகரில் இப்போதைக்கு இதுமட்டுமே முடியும். (வாசிக்க)

Gravatar என்றால் என்ன ?

நாம் ஒவ்வொரு தளங்களிலும் நம் Profile புகைப்படங்களை நுழைப்பது வழக்கம். உதாரணமாக வேர்ட்பிரஸ் தளத்தில் ஒரு படம், ப்ளாகர் தளத்தில் ஒரு படம், தமிழ்மணத்திற்கு ஒரு படம் என ஒரே படத்தை பல தளங்களில் தரவேற்ற வேண்டும். இதற்கு மாற்றாக வந்திருக்கும் தொழில்நுட்பம் தான் Gravatar - globally recognized avatar. ஒரே இடத்தில் புகைப்படத்தை வைத்து விட்டு பல்வேறு தளங்களிலும் அந்த புகைப்படங்களை பயன்படுத்தும் வசதி தான் Gravatar. நம்முடைய மின்னஞ்சலுடன் ஒரு புகைப்படத்தை Gravatar தளத்தில் நுழைத்து விட்டால், அந்த மின்னஞ்சலை கொண்டு அனைத்து தளங்களிலும் அந்த புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக நாம் பல வலைத்தளங்களில் மறுமொழிகளை இடும் பொழுது இது மிகுந்த உதவியாக இருக்கும்.

(நன்றி: தமிழ்மணம் அறிவிப்புகள்)

Blogger Profile படமாக Gravatar

1. Gravatar தளத்தில் கணக்கோன்றை தொடங்கி உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு என்ற தங்கள் புகைப்படங்களை இணைத்துக் கொள்ளவும். (talkout@gmail . com)

2. http://en.gravatar.com/site/check/talkout@gmail.com பக்கத்துக்கு சென்று படத்துக்கான URLஐ Copy செய்யவும்.
3. Bloggerல் Edit Profileக்கு செல்லவும்.

4. அங்கு Photograph என்பதன் கீழ் காட்டப்படும் Remove Image அழுத்தி, ஏற்கனவே உள்ள படத்தை நீக்கவும்.

5. அடுத்து தோன்றும் From the web இல், Gravatarல் (படிமுறை 2) Copy செய்த URLஐ Paste செய்யவும்.

6. இனி உங்கள் Gravatar படமே உங்கள் Blogger Profile இலும் காட்டப்படும்.

இதால் என்ன பயன்?

* படத்தை ஒரு இடத்தில் மட்டும் மாற்றினால் போதும்.
* ...?

வேற பயன்பாடு ஏதாவது இருந்தா பின்னூட்டத்தில சொல்லுங்கோ... மீண்டும் சந்திக்கலாம்...

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: கணனி, வலைப்பதிவு, blogger, avatar, Gravatar, wordpress, blogging

புதன், 16 ஏப்ரல், 2008 / 5:30 AM

இந்த சாமி, சாமியா? ஆசாமியா?? - The Secret Aa-Swami

நாம் சாமிகள் என்று நினைக்கும் பல(ர்) உண்மையில் சாமிகளாகவன்றி ஆசாமிகளாகவே இருப்பதை அறிந்திருக்கிறேன். இந்த பதிவில் இருப்பதும் அவ்வாறான ஒரு ஆசாமியா என சிலர் எண்ணக்கூடும். ஆகவே படங்களில் உள்ள முகங்களை கவனமாக(?!) பார்க்கவும், அல்லது கடைசிவரை வாசிக்கவும்.

நேற்று 'தனிமை' போட்டிக்காக பதிவு போட்டபோது முதலில் இந்த படத்தை போடலாம் என்றிருந்தேன். பிறகு வேறு படத்தை போட்டிருந்தாலும் இதையும் இங்கு பகிர்கிறேன்.

இந்த படம் தஞ்சாவூர் சரபோஜி மஹாலில் எடுக்கப்பட்டது.

மேலே உள்ளது லெமோகிராபி (Lemography) முறையில் பிற்சேர்க்கை செய்ய முயற்சித்தது. Photoshopல் எவ்வாறு செய்யலாம் என்று இங்கே உள்ளது. GIMPஇலும் அதே முறையில் செய்யலாம்.

கீழே உள்ளது Picasaவில் பிற்சேர்க்கை செய்த அதே படம்.

இதுதான் மூலப்படம்.
இறுதியாக, இந்த படத்தில் இருக்கும் ஆசாமி... அது நான் தான்!!
அப்ப முதல் பந்தி...? சும்மா...!! ;)

கேடயக் குறிப்பு:
  1. பொய் சொல்வதை தவிர எனக்கும் அவருக்கும் பொதுவான 'திறமைகள்' எதுவும் இல்லை.
  2. நீண்ட கேசத்தை தவிர வேறு ஒற்றுமைகளும் இல்லை. (இப்ப அதுவும் இல்லை)
  3. ஆகவே, 'நான் அவன்(ர்?) இல்லை...!'
  4. இது 'கேடயக் குறிப்பு' இல்லை... :)
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

செவ்வாய், 15 ஏப்ரல், 2008 / 5:00 PM

தனிமையில் ஒரு பொன்மாலைப் பொழுது

PIT - ஏப்ரல் - 2008 போட்டிக்காக ஏதாவது ஒரு படம் எடுக்கலாம் என்று கமராவை தேடின போதுதான் அதை நண்பனொருவனுக்கு கொடுத்தது ஞாபத்துக்கு வந்தது. சரியெண்டு அவனுக்கு கோல்பண்ணினா அவன் கமராவோட திருச்சிக்கு போயிட்டான்.

சரி, 'வெல்லுறது முக்கியமில்ல, படம்காட்டுறது தான் முக்கியம்!' என்றதுக்காக ஏற்கனவே எடுத்த படங்களுக்க தேடேக்க இதுதான் மாட்டிச்சு. எவ்வளவு பொருத்தம், எப்பிடி இருக்கெண்டு நீங்கதான் சொல்லோணும்....

தனிமையில் ஒரு பொன்மாலைப் பொழுது
படத்தில இருக்கிறவர் பிறைதீசன். அவற்ற தனிமைய பற்றி தனிப்பதிவில பாக்கலாம். :)

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
Posted by Picasa

சனி, 5 ஏப்ரல், 2008 / 8:30 PM

றோட்டு மேல போறான் ஒரு கேடி

இன்று எனது கணனியிலுள்ள பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த போது இந்த பாடலையும் பல நாட்களின் பின்னர் கேட்க நேர்ந்தது. இது 2005ம் ஆண்டுப்பகுதியில் நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கிய 'முதல் சுவடு' இசைத்தொகுப்பில் இடம்பெற்றது.

Metal Rock வகை இசையை சார்ந்து அமைந்த இப்பாடல் வரிகளுக்காகவும் இசைக்காகவும் பலரின் எதிர்ப்பை சம்பாதித்த அதேவேளை, இன்னும் அதிக நண்ர்களின் வரவேற்பயும் பெற்றது.

நீங்களும் கேட்டுப்பாருங்க...!

பாடியோர் : நிதர்ஷன், பிரதீபன், கோகுல்
பாடல்வரிகள் : அருணன்
இசையமைப்பு : அருணன், சிந்துஜன்
தயாரிப்பு, ஒலிக்கலவை : நிமல்

பாடலை கேட்க:


பாடல்வரிகள்:

றோட்டு மேல போறான் ஒரு கேடி
அவன் வளக்கிறான் பிரஞ்சு தாடி
அவன் கையில இருப்பதுவோ பீடி
அதால் ஆகப்போறான் சீக்கிரமா பாடி

தினந்தோறும் டப்பாங்கூத்து ஆடி
தெருவெல்லாம் கும்மாங்கூத்து பாடி
கேடிமேல கண்ண வச்சான் லேடி
அவன் போகப் போறான் அவளேட ஓடி

கேடி சீதனமா கேட்டுப்புட்டான் கோடி
அத கேட்ட இடமோ மாடி...
கோபத்தாலே தள்ளிவிட்டா லேடி
கேடி ஆகிப்புட்டான் உடனே பாடி

பேராசை பெருநட்டம் தம்பி
நீ போகாதே பெண்களை நம்பி...
அதால் உனக்கு கிடைக்கும் ஒரு பொல்லு
பின்னால் உனக்கு ஏது ஒரு சொல்லு..!

கேடயக் குறிப்பு: எந்தக் கருத்துக்களும் பொதுவானவை அல்ல, தொப்பி சரியா இருக்கிறவங்க மட்டும் போட்டுக்கொள்ளலாம். :)

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: songs, muthalsuvadu, tamil sri lanka, arunan, sindujan, friends