இந்த வலைப்பதிவு
தற்காலிகமாக
செயற்பாட்டில் இல்லை.


புதன், 31 டிசம்பர், 2008 / 6:15 PM

2009ல் செய்ய நினைப்பவை

எனக்கு இது கொஞ்சம் ஓவர் தான்.

அடுத்த நாளுக்கு பிளான் போட்டாலே சரியா செய்ததா சரித்திரம் இல்லை. இதில ஒரு வருசத்துக்கு To-Do List வேற போடுறாராம் எண்டு சொல்லுறது கேக்குது. ஆனாலும் என்ட கொள்கை என்னெண்டால் (இது வேறையா) 'திட்டமிடாம இருக்கிறத விட திட்டமிட்டு செய்யாம விடுறது மேல்'. (மற்றதெல்லாம் female)

அந்தவகையில 2009ம் ஆண்டுக்கான எனது திட்டப்பட்டியல்...

Academic
  1. முதலாவதாக Project eID ஐ நேரத்துக்குள்ள முடிக்கோணும் (இப்பிடி புளோக் எழுதி நேரத்த வீணாக்காம).
  2. ஆராய்ச்சி கட்டுரைகளை திட்டமிட்டபடி வெளியிடுதல், முடிந்தால் இன்னும் சிலதும் எழுதலாம்.
  3. இறுதி ஆண்டு பரீட்சை !!!.
  4. Google Summer of Code (நான் பங்குபற்ற ஏலுமோ தெரியாது... பாக்கலாம்...).
  5. மேல் படிப்புக்கு சரியா திட்டமிடவேணும் (இதுக்கு மேலையுமா...!).

Professional
  1. இலங்கை பதிவர் திரட்டியை செய்து முடித்தல், முடிந்தால் பதிவர் சந்திப்புக்கள்.
  2. ஒரு நல்ல புகைப்பட கருவி, சிறிய வீடியோ கமரா வாங்குதல்.
  3. குறைந்தது ஒரு (பயண) ஆவணப்படம் செய்தல்.
  4. சுயதொழில் திட்டமிடல் (ஏனிந்த வேண்டாத வேலை....?).
  5. ஒரு நிறுவனம் பதிவு செய்தல். (புளோக்கில பதிவு போடுறது இல்லை...).

Personal
  1. வலைப்பதிவுகளிலும் (ஆங்கிலத்திலும் தமிழிலும்) தரமான பதிவுகள் அதிகம் எழுதலாம்.
  2. லியோ கழக நடவடிக்கைகளில் இன்னும் அதிகமா நேரம் செலவளிக்கலாம் (ஒரு சமூக அக்கறை தான்).
  3. நூலகம் தளத்திற்கு அதிகரித்த பங்களிப்பு... !!
  4. வெளிநாட்டு பயணம்/சுற்றுலா போகலாம் (சும்மா...).
  5. ஒரு சில விட்டுப்போன மருத்துவ சிகிச்சைகளை செய்யலாம்.
  6. ஆரோக்கியமான முறையில் கொஞ்சம் எடை கூடலாம். :-)

இதுவே ஓவர், இதுக்குமேல எழுதினா ரொம்ப ஓவராயிடும்.
பாக்கலாம் இதில எவ்வளவு செய்யலாம் எண்டு.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!!

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

புதன், 24 டிசம்பர், 2008 / 11:59 PM

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் - பேஸ் புக் - நல்லூர் கந்தன்

அனைத்து நண்பர்களுக்கும் 
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்...!



இண்டைக்கு சும்மா கன நாளைக்கு பிறகு பேஸ்புக்/மூஞ்சிப்புத்தகம் (Facebook) பாத்துக்கொண்டிருக்கிருந்தேன். திடீரெண்டு ஒரு பக்கத்தில நல்லூர் கந்தன் முகப்பு படம். என்னடா எண்டு பாத்தால் கீழ நான் பாத்துக்கொண்டிருந்த படத்துக்கு முன்னேஸ்வரம் என்பது டிஸ்கிரிப்ஷனாக இருந்தது. 
(படத்தில கிளிக்கினால் பெருசா பார்க்கலாம்)

Facebook Ads என்பது தொடர்புடைய (related) விளம்பரங்களை காட்டும். அந்த வகையில் முன்னேச்சரத்திற்கு நல்லூர் ஒரு கோவில் என்றவகையில் தொடர்புபட்டவைதான். அவ்வாறேனில் Facebook க்கு தமிழ் தெரியுமா? எல்லாம் நல்லூர் முருகன் செயல்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்