இந்த வலைப்பதிவு
தற்காலிகமாக
செயற்பாட்டில் இல்லை.


ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009 / 9:00 PM

ஆடுகளின் கதை - 2

இரு காடுகளிலும் ஆடுகளின் நிலை இவ்வாறிருக்க...

சிறிய காட்டிலே ஆடுகளின் நிலை இன்னமும் மோசமாகி வந்தது. தினமும் இருபது, முப்பது என ஆடுகள் வேட்டையாடப்படுவது அதிகரித்து வந்தது. ஆனாலும் இந்த செய்தி எதுவும் மற்ற காடுகளுக்கு பரவாத படி நரி ராசாவும் அதன் கூட்டமும் அவதானமாய் இருந்தன. அவை தாம் ஆடுகளுக்கு எந்த தீங்கும் செய்வதில்லை என்றும், ஆட்டிறச்சி தமக்கு ஒவ்வாமை தரும் என்றும், ஆடுகளும் நரிகளும் சகோதரர்களாகவே வாழ்வதாகவும் கூறித்திரிந்தன.

சிறிய காட்டு ஆடுகளின் நிலை பெரிய காட்டு ஆடுகளுக்கு படிப்படியாக தெரிய ஆரம்பித்தது. அழிவிலிருந்து அவற்றை காப்பாற்ற இந்த ஆடுகளும் தம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்தன. தமது செவிட்டு தலைவருக்கும் ராசாவுக்கும் புரியவைப்பதற்காக அவற்றில் சில மஞ்சள் தண்ணீரில் குளித்து தம்மை வெளிக்காட்ட முயன்றன. ஆனாலும் அந்த ராசாக்களோ தாம் மேஞ்ச்சலுக்கு செல்லும் போது காலில் கல் தடக்கி காயமானதாக கூறி, குணமாகும் வரை ஓய்வெடுப்பதாக அறிவித்தன.

மற்ற இதர காடுகளில் இருந்த சில ஆடுகளும் அந்தந்த காட்டு ராசாக்களிடம் தமது காட்டு ஆடுகளை காப்பாற்றும் படிகேட்டன. ஆனாலும் தமக்கு தேவையான எந்த உணவோ 'பானமோ' இந்த சிறிய காட்டில் கிடைக்காது என்பதால் தாம் உதவுவதால் தமக்கு எந்த பயனும் இல்லை என்றன.

இவ்வாறாக மற்ற காடுகளிலிருந்து உதவிவரும் என நம்பி நம்பியே சிறிய காட்டு ஆடுகள் அழிவுப்பாதையில் பயணிக்க தொடங்கின.

(தொடருமா...?)

பி.கு. 1: பெப்ரவரி இறுதி வரை இந்த கதையின் அடுத்த பகுதி எழுதும் எண்ணம் இல்லை. எனக்கு இந்த ஆடுகளின் கதையைவிட எனது சொந்த வேலைகள் தான் முக்கியம்.

பி.கு. 2: மாடு வேடமிட்ட சில ஆடுகளால் நரி ராசாவின் பெயர் குறித்து கதைக்க முடியும். ஆனாலும் சொந்த பெயர் சொல்லும் ஆடுகளால் அது முடியாது.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: genocide, fire, solution, exam, university, anonymous, ?

3 Responses to ஆடுகளின் கதை - 2

  1. சுபானு
    February 2, 2009 12:35 AM
    //ஆனாலும் தமக்கு தேவையான எந்த உணவோ 'பானமோ' இந்த சிறிய காட்டில் கிடைக்காது என்பதால் தாம் உதவுவதால் தமக்கு எந்த பயனும் இல்லை என்றன.

    ஆதாயம் இல்லாவிட்டால் ஆண்டவனே படியளக்க மாட்டான் என்னும் போது அந்த ஆடுகள் என்ன பண்ணும் பாவம்...
  2. Divyapriya
    February 2, 2009 8:41 PM
    //சில மஞ்சள் தண்ணீரில் குளித்து//

    கொடுமை!!!
  3. சாயினி
    February 6, 2009 12:01 AM
    அடடே.. நிமல்.. சத்தியமாச் சொல்றன்.. நான் இப்போ தான் இதைப் படிக்கிறன்.. சொந்தப் பெயர் பற்றியெல்லாம் கதைச்சிருக்கிறீங்க.. :D

    சில ஆடுகள் தனக்குக் கெட்டது நடக்காது என்று ஒரு குருட்டுத் தைரியத்தில தன் வாயால தானே கெடவும் பார்க்குதுகள்.. :)

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.