அந்த சம்பவம் முதலில் நடந்தது பதினோராம் வகுப்பில் படிக்கும் காலத்திலென்று நினைக்கிறேன். அதுவரை இல்லாத பொறுப்பு வந்ததோ இல்லையோ,வெறுப்பு மட்டும் வரவர கூடிக்கொண்டே வந்தது. ஓருவாறாக என்னவேன்றே புரிந்து கொள்வதற்கு முன்பே எல்லாம் நடந்து முடிந்துவிடிருந்தது. பின்னர் பன்னிரெண்டாம் வகுப்புக்கு வந்ததுடன் எல்லாம் முடிந்தது போல் இருந்தது.
அதுவும் ஒரு வருடத்தில் தலைகீழாக மாறி அதே எண்ணங்கள், அதே பயங்கள், அதே வெறுப்புக்கள். ஒரே வித்தியாசம் இந்தமுறை உள்ளூர சிறியளவு விருப்பமும் இருந்தது. முடிவு எப்படியிருந்தாலும் முயற்சித்து பார்க்கும் எண்ணம் வந்திருந்தது. மாதங்கள் வருடங்களாக அதுவும் நடந்து வாழ்க்கையும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. அப்போது ஆசைப்பட்டது, கிடைக்காது என்று நினைத்தது, கிடைத்த போது மகிழச்சி எல்லை கடந்த நிலையில் இருந்தேன். ஆனால் இதுவும் குறுகியகாலத்திற்கு தான் என்பதை அப்போது நான் உணர்ந்திருக்கிவில்லை.
சில மாதங்களிலேயே மீண்டும் அதே அதே எண்ணங்களும் சம்பவங்களும். ஆனால் இப்போது அவை பழகிவிட்டிருந்தன. அதன் பின்னரான அண்மைய காலங்களில் இந்த சம்பவங்கள் சாதாரண நிகழ்வுகளாகிப்போயின. முடிவுகள் எவ்வாறான போதும் முயற்சிக்கும் மனப்பக்குவும் வந்திருந்தது. இவ்வாறாக சில பல படிகளை தாண்டி இன்றய நிலைக்கு வந்திருக்கிறேன். இப்போதைக்கு எல்லாம் விட்டு விலகியது போல் உணர்கிறேன்.
பார்க்கலாம்... இனி வாழ்க்கை காட்டும் பாதையை...!
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
Tags: பரீட்சை, exams, "all my final semester exams are over...!"









3 மார்ச், 2009 7:15 pm
எனக்கு விளங்குது!! ;)
3 மார்ச், 2009 8:09 pm
Tags பார்த்தால் இன்னமும் விளங்கும் :)
3 மார்ச், 2009 8:53 pm
அன்புடன் அருணா
3 மார்ச், 2009 11:56 pm
happy hols :)) இல்ல இன்னும் project இருக்கா?
4 மார்ச், 2009 12:58 am
4 மார்ச், 2009 1:06 am
project இந்த மாதத்தோட முடிஞ்சிரும்...!
அப்புறம் தான் happy hols :)