- இது என்ன தொடர் கதையா? சிறுகதையா?
தொடர் தான், ஆனால் கதை சிறியது.
- இதற்கு முன்னர் கதை எழுதிய அனுபவம் உண்டா?
அம்புலிமாமாவில் வந்த கதையை பெயர் மாற்றி பாடசாலை சஞ்சிகைக்கு எழுதிய அனுபவம் உண்டு.
- ஏன் இந்த விபரீத முயற்சி?
என்னால் முடிந்தது... ;-)
- இது கற்பனைக் கதையா? உண்மைக் கதையா?
கதை உண்மையானது, ஆனால் சில சம்பவங்கள் கற்பனையானவையாக இருக்கலாம்.
- உண்மை என்றால் யாருடைய கதை?
திரு. நிமலபிரகாசன் என்பவருடையது.
- இதில் எந்தெந்த கதாபாத்திரங்கள் உண்மையானவை?
அனேக பாத்திரங்கள் உண்மையானவையாவே இருக்கும், ஆனால் பெயர்கள் கற்பனையானவை.
- இதை எழுதும் எண்ணம் ஏன் ஏற்பட்டது?
மறக்க நினைக்கும் சிலவற்றை நினைவில் வைத்திருக்க... ;-)
- இதை தொடர்ந்து எழுதும் எண்ணம் இருக்கிறதா?
இப்போதைக்கு எண்ணம் இருக்கிறது. ஆனால் முடியுமா என்பது முடிந்த பின் தான் தெரியும்.
- நாங்கள் இதை வாசிக்கத்தான் வேண்டுமா?
என் எழுத்தை வாசிப்பது உங்கள் தலையெழுத்து என்றால் வாசிக்கத்தான் வேண்டும்.
- வேறு சந்தேகங்கள் கேள்விகள் இருந்தால் கேட்கலாமா?
கேட்கலாம், ஆனாலும் பதில் கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
Tags: my story









14 ஏப்ரல், 2009 1:17 pm
மறக்க நினைக்கும் சிலவற்றை நினைவில் வைத்திருக்க என்ற பதில் நச். முதலாவது பாகத்தை வாசிப்பதற்கு வெகு ஆர்வமாக உள்ளேன்.
அசத்துங்க நிமல்.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
14 ஏப்ரல், 2009 8:07 pm
மறக்க நினைக்கும் சிலவற்றை நினைவில் வைத்திருக்க... ;-)நல்ல முயற்சி... நாங்கள் வாசிக்கத் தயாராக இருக்கின்றோம்... :)
14 ஏப்ரல், 2009 8:11 pm
தலைப்பே அசத்தலாவும் சின்ன வில்லங்கமாகவும் அல்லவா இருக்கின்றது.. கண்டிப்பாக காதலித்த கதையாகத்தான் இருக்கும்... நல்ல ஒரு காதற் கதையினை எதிர்பார்க்கின்றோம்....
பொறுத்திருந்து பார்ப்போம்...
14 ஏப்ரல், 2009 8:29 pm
கதை வாசிக்க ஆவலாயுள்ளேன்
14 ஏப்ரல், 2009 10:06 pm
மிகவிரைவில் முதலாவது பாகம் வரலாம்...!
15 ஏப்ரல், 2009 9:31 pm
கலக்குங்க...
16 ஏப்ரல், 2009 6:06 pm