இந்த வலைப்பதிவு
தற்காலிகமாக
செயற்பாட்டில் இல்லை.


வெள்ளி, 27 மார்ச், 2009 / 9:00 AM

Skandha (அ) அப்பா

Skandha ஒரு கண்டிப்பான வங்கி மேலாளர், எனக்கு ஓரளவு கண்டிப்பான அப்பா.

Skandha நேற்றோடு வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார், ஏனென்றால் அப்பாவுக்கு இன்று அறுபதாவது பிறந்தநாள்.

அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...!

அன்புடன்,
நிமல்

வியாழன், 5 மார்ச், 2009 / 5:45 PM

அரங்கம் - The Arena (ஒரு மீள் பார்வை)

சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த பதிவில் நான் குறிப்பிட்ட அரங்கம் குறும்படத்தின் ஒரு மீள்பார்வையே இது.

இது பாடசாலை காலத்தில் முற்று முழுதாக பாடசாலை மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு 30 நிமிட குறும்படம். ஆகவே அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடகமன்ற 2004ம் வருட ஆண்டு விழாவினை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டது. குத்துச்சண்டை போட்டி தொடர்பான ஒரு மர்ம கதை(?). இதுதான் எமது முதல் முயற்சி, ஒரு சிறு முயற்சி.


இங்கு தெரியாவிட்டால் இங்கு காண்க.

இயக்கம் : சுந்தரகுமார்
இயக்குனரும் ஏதாவது காட்சில் தோன்றவேண்டும் என்ற மரபுக்கிணங்க ஒரு காட்சியில் வைத்தியராக தோன்றியிருப்பார். இப்போது இவர் யுனைசஸ் ஸேசஸ் அமேரிக்காவில் ஒரு 'பாடகராகவும்' இருப்பதாக அறியக்கிடைக்கிறது.

எழுத்து : நிஷாந்தனன்
அளவுக்கதிகமாக மேடைநாடகங்களில் நடித்தால் செய்தியாளராக வரும் இவர் ஓவர் ஆக்டிங் செய்ததாக கூறப்பட்டது. அதைவிடவும் இந்த குறுப்படத்தின் கதையை இவர் யாரும் பார்க்காத ஒரு ஆங்கிலப்படத்தில் சுட்டதாக சில விஷமிகள் வதந்திகளையும் பரப்பியிருந்தனர். இப்போது இவர் Nish Neelaloj என்ற பெயரில் இங்கிலாந்தில் 'இருப்பதாக' கூறப்படுகிறது.

படத்தொகுப்பு : கோகுல்
இவர்தான் இந்த படத்தில் போலீஸ். போலீஸ் யுர்னிபோம் கிடைக்காததால் தான் சாதார உடையில் இவர் வந்ததாக நினைப்பது தவறு. இப்போது இவர் Waterlooவில் 'படிப்பதாக' சொல்லிக்கொள்வதாக சொல்லப்படுகிறது.

ஒளிப்பதிவு : தனுஷியன்
இந்த குறுப்படத்தின் ஒளிப்பதிவாளர் என்று சொல்லப்பட்டது. இப்போது இவர் எங்கிருந்தாலும் 'ஸ்டெடியாக' இருப்பதாக கூறுகிறார்கள்.

இசைக்கோர்வை : அருணன், சிந்துஜன்
அருணன் இப்போது பேஸ்ட்ரி சாப்பிடுவதை விட்டு பேகர் 'சாப்பிடுவதாக' அவுஸ்திரேலியாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிந்துஜன் சீனாவில் பாம்புக்கு 'வைத்தியம்' பார்ப்பதாகவும் அறியக்கிடைக்கிறது.

மேலும் ... றோயல் கல்லூரி 2004 குழு தமிழ் மாணவர்கள் ...!
இந்த குழுவில் நானும் இருந்தது மகிழச்சி.


(இது ஆறு மாதங்களுக்கு முன்னரே எழுதி draftல் இருந்தது, so some facts might be outdated by now)

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: arangam, short film, royal college, drama

புதன், 4 மார்ச், 2009 / 5:25 PM

ஏழு முட்டாள்களும், ஒரு வீடியோ கமராவும்

பார்க்க மட்டுமே, சொல்வதற்கு எதுவுமில்லை...!



Seven Ordinary men,
Four Ordinary Digital Cameras,
One Ordinary Video Camera,
Two Disastrous Days on the Road...!

Fools are not Made,
They are Born...!

மீண்டும் சந்திக்கலாம்...

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: video, trip, camera

செவ்வாய், 3 மார்ச், 2009 / 9:15 AM

விட்டு விலகியது...

அந்த சம்பவம் முதலில் நடந்தது பதினோராம் வகுப்பில் படிக்கும் காலத்திலென்று நினைக்கிறேன். அதுவரை இல்லாத பொறுப்பு வந்ததோ இல்லையோ,வெறுப்பு மட்டும் வரவர கூடிக்கொண்டே வந்தது. ஓருவாறாக என்னவேன்றே புரிந்து கொள்வதற்கு முன்பே எல்லாம் நடந்து முடிந்துவிடிருந்தது. பின்னர் பன்னிரெண்டாம் வகுப்புக்கு வந்ததுடன் எல்லாம் முடிந்தது போல் இருந்தது.

அதுவும் ஒரு வருடத்தில் தலைகீழாக மாறி அதே எண்ணங்கள், அதே பயங்கள், அதே வெறுப்புக்கள். ஒரே வித்தியாசம் இந்தமுறை உள்ளூர சிறியளவு விருப்பமும் இருந்தது. முடிவு எப்படியிருந்தாலும் முயற்சித்து பார்க்கும் எண்ணம் வந்திருந்தது. மாதங்கள் வருடங்களாக அதுவும் நடந்து வாழ்க்கையும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. அப்போது ஆசைப்பட்டது, கிடைக்காது என்று நினைத்தது, கிடைத்த போது மகிழச்சி எல்லை கடந்த நிலையில் இருந்தேன். ஆனால் இதுவும் குறுகியகாலத்திற்கு தான் என்பதை அப்போது நான் உணர்ந்திருக்கிவில்லை.

சில மாதங்களிலேயே மீண்டும் அதே அதே எண்ணங்களும் சம்பவங்களும். ஆனால் இப்போது அவை பழகிவிட்டிருந்தன. அதன் பின்னரான அண்மைய காலங்களில் இந்த சம்பவங்கள் சாதாரண நிகழ்வுகளாகிப்போயின. முடிவுகள் எவ்வாறான போதும் முயற்சிக்கும் மனப்பக்குவும் வந்திருந்தது. இவ்வாறாக சில பல படிகளை தாண்டி இன்றய நிலைக்கு வந்திருக்கிறேன். இப்போதைக்கு எல்லாம் விட்டு விலகியது போல் உணர்கிறேன்.

பார்க்கலாம்... இனி வாழ்க்கை காட்டும் பாதையை...!

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: பரீட்சை, exams, "all my final semester exams are over...!"