வியாழன், 30 ஏப்ரல், 2009 / 4:30 pm

துருக்கித் தொப்பி யாருக்கு...?



மேலதிக விபரங்கள்: இங்கே

Tags: ICAMES 2009, Turkey, Competition, Project, Selection

சனி, 25 ஏப்ரல், 2009 / 3:30 pm

கடை மூடும் Geocities - இணையவெளியில் இன்னொரு கருந்துளை

நான் முதல் முதலில் இணையத்தில் கட்டிய வீடு Yahoo இலவசமாக வழங்கும் GeoCities தளத்திலேயே இருந்தது, அது 2000-2001 காலப்பகுதி என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் மின்னஞ்சல், குழுக்கள், தேடல் என்று அப்போது இணையத்தில் பிரபலமாக இருந்த சேவைகள் அனைத்திலும் Yahoo முன்னணியில் இருந்தது. GeoCities இலவசமாக தனிப்பட்ட இணையத்தளங்களை உருவாக்கக்கூடிய ஒரு வழங்கி சேவையாக இருந்தது. ஆனால் இப்போது Yahoo தனது இலவச GeoCities சேவையை இந்த வருடத்துடன் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

We have decided to discontinue the process of allowing new customers to sign up for GeoCities accounts as we focus on helping our customers explore and build new relationships online in other ways. We will be closing GeoCities later this year. -Yahoo!

இணையப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்ங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமையும், வலைப்பதிவுகள், டுவீட்டர் போன்ற சேவைகளை பயனர்கள் நாடுவதும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அத்துடன் Yahoo நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் நிர்வாக நிதிநிலை சிக்கல்களும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இணையத்தளங்கள் பிரபலமடைய ஆரம்பித்த காலப்பகுதியில் தனது சேவைகளை தொடங்கிய GeoCities பலருக்கும் தமது தனிப்பட்ட தளங்களை வைத்திருக்கும் இடமாக இருந்தது. GeoCities ஒரு இணையத்தளம் உருவாக்குவதை பயனருக்கு இலகுவாக்கி domain பதிவு HTML போன்றவை இன்றி இலகுவாக தளங்களை உருவாக்குவதில் முன்னோடியான தளமாகவும் இருந்தது. இதன் காரணமாகவே தமிழிலும் பல நூறு தளங்கள் GeoCitieல் அமைக்கப்பட்டன. நான் இதுவரை இணையத்தில் உலாவும் பல சந்தர்ப்பங்களில் பல பயனுள்ள தமிழ் தளங்கள் GeoCitiesல் கண்டிருக்கிறேன்.

ஆனாலும் GeoCities தளங்களில் பலவும் சாதாரண பயனர்களால் உருவாக்கப்பட்டவையே. முக்கியமாக பல தமிழ் GeoCities தளங்கள் பயனுள்ள தகவல்களை கொண்டிருந்தாலும் அவற்றில் பல தற்போது கவனிப்பாரற்றே இருக்கின்றன. இந்த நிலையில் GeoCities தளம் முடப்படும் போது, இந்த தளங்களும், முக்கியமாக அவற்றில் சேமிக்கப்பட்டுள்ள பல ஆயிரங்கள் வரையான கவிதைகள், கட்டுரைகள் என்பனவும் காணாமல் போகும் நிலையே ஏற்படும்.

ஆகவே நண்பர்களே உங்களின், அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் தளங்கள் ஏதும் இருந்தால் அவற்றையும் வேறு இடங்களுக்கு மாற்றிவிடுங்கள். நான் பார்த்தவரையில் பல நூறு தளங்கள் தமிழில் இருக்கின்றன, அவற்றில் சிலவாவது எஞ்சட்டும்.

இணையத்தின் நிலையாமை பற்றிய இந்த பதிவுகளையும் படிக்கவும்:

வியாழன், 16 ஏப்ரல், 2009 / 10:00 pm

நேர்முகத் தேர்வு - சில குறிப்புக்கள்

(இது எனது அனுபவங்களில் இருந்து மட்டும் எழுதப்படவில்லை.)

தயார்ப்படுத்தல்:
  • உங்கள் சுயவிபரக்கோவை, இதர ஆவணங்கள், அவற்றின் பிரதிகள் என்பவற்றை முன்னரே தயாராக வைத்திருக்கவும். கேட்டால் பார்க்கலாம் என்று இருந்து சங்கடப்படுவதிலும் பார்க்க, கேட்கப்படாது என தெரிந்தாலும் தயாராக செல்வதே நல்லது. 
  • கேட்கப்படலாம் என எதிர்பார்க்கும் பொதுவான வினாக்களுக்கு தயார்ப்படுத்தலுடன் செல்வது நலம்.
ஆராய்ச்சி:
  • நீங்கள் செல்ல இருக்கும் நிறுவனத்தையும் அவர்களின் செயற்பாடுகள் பற்றியும் அடிப்படையாக தெரிந்து வைத்திருக்கவும். இதற்கு அவர்களின் இணையத்தளம் மற்றும் முக்கியமாக அங்கு ஏற்கனவே பணியில் யாராவது seniors/friends இருந்தால் அவர்களிடம் உரையாடுவது பயன்தரும். 
  • முக்கியமாக அவர்கள் என்ன பணிக்கு தெரிவுசெய்கிறார்கள், தெரிவு செய்யப்படுபவரிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பவற்றை தெரிந்து வைத்திருப்பது எம்மை சரியான முறையில் வெளிப்படுத்த உதவும். அத்தோடு இவ்வாறு நிறுவனத்தை பற்றி தெரிந்து வைத்திருத்தல் நேர்முகத் தேர்வை தன்னம்பிக்கையுடன் அணுகவும் உதவும்.
புறம்:
  • புறத்தோற்றம் ஒரு முக்கிய காரணி என்பதை நினைவில் நிறுத்தவும். 'என் திறமைக்கு வேலை தந்தால் சரி' என்ற பந்தாவை விடுத்து, பொருத்தமான ஆடை அணியவும். 
  • அந்த நிறுவனத்தில் வேலைக்கு சாதாரண ஆடை தான்(casual) அணிவதென்றாலும் நேர்முகத்தேர்வுக்கு பொருத்தமான professionally acceptable ஆடை அணிவது நலம்.
அகம்:
  • மேற்கூறியவற்றை சரியாக செய்திருந்தால், எமக்கு தானாக ஒரு தன்னம்பிக்கை வரும். ஆனாலும் அதையும் தாண்டி மனப்பயம் இருந்தால் அதை அதிகமாக வெளிக்காட்டுவதை தவிர்க்கலாம். ஆனால் அதற்காக over confident என்று act கொடுத்து மாட்டிக்கொள்ள கூடாது.
சுய 'வியாபாரம்':
  • நேர்முகத்தேர்வை ஒரு வியாபாரமாக பார்க்கவும், உங்களின் திறமைகளையும் அனுபவங்களையும் சரிவர வெளிப்படுத்தவும். உங்கள் அனுபவங்களை கூறும்படி கேட்டால், அந்த நிறுவனத்தில் செயற்பாடுகளுக்கு அவை உதவும் என தோன்றும் வகையில் அவற்றை தெரிவிக்கவும். 
  • அத்தோடு அவர்கள் "any question you want to ask us?" என்று கேட்டால், "ஏன் நீங்கள் product A ஐ விடுத்து product B யில் அதிகம் கவனம் செலுத்துகிறீர்கள்?" போன்றதான தொடர்புடைய கேள்விகளை கேட்பது உங்களின் தயார்படுதலையும் ஈடுபாட்டையும் வெளிக்காட்டும். (அதற்காக இல்லாத product பெயர் சொல்லி கேட்பது உசிதம் அல்ல)
பின் தொடர்பு:
  • நேர்முகத் தேர்வு முடிந்தது இனி அவர்களின் பதில் வரும் வரை காத்திருப்போம் என்றிருக்காமல், அவர்களுக்கு உங்களை நேர்முகத் தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அல்லது கடிதம் அனுப்பலாம். இதில் நேர்முகத் தேர்வில் நடைபெற்ற உரையாடலின் சுருக்கத்தையும் குறிப்பிடுவது உங்களை அவர்களுக்கு மீண்டும் நினைவூட்ட உதவும்.
தொடர் முயற்சி:
  • முதல் முயற்சி வெற்றியளித்தால் மகிழச்சிதான், இல்லாவிட்டால் அதை ஒரு அனுபவமாக கருதவும். இது உங்களின் அடுத்த நேர்முகத் தேர்வுகளின் இன்னும் தன்னம்பிக்கையுடன் முகம்கொடுக்க உதவும். தொடர் தயார்ப்படுத்தலும் தொடர் முயற்சியும் நிச்சயம் வெற்றியை பெற்றுத்தரும்.
இவை எனது அனுபவங்களிலும், வேறு பல சந்தர்ப்பங்களில் கேட்டவை, படித்தவை மட்டுமே. எனக்கு இதுவரை சரியான ஒரு நேர்முகத் தேர்வு அனுபவம் இல்லை... :-)

வாழ்த்துகள்...!

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: job, interview, tips

செவ்வாய், 14 ஏப்ரல், 2009 / 9:00 am

என் கதை: நான் காதலிக்காத கதை - முன்னுரை

இதுவரை இந்த வலைப்பதிவில் உருப்படியாக ஒரு பதிவுவேனும் எழுதியதாக இல்லை. ஆதலால் எதாவது 'உருப்படியாக' எழுதலாம் என்று தொடங்குவது தான் இந்தத் தொடர். இது உருப்படியாக வருமா இல்லையா என்பது பற்றி எதுவும் கூறமுடியாவிட்டாலும் இது தொடர்பாக கேட்கப்படக்கூடிய சில கேள்விகளுக்கு என் பதில்கள்.
  1. இது என்ன தொடர் கதையா? சிறுகதையா?
    தொடர் தான், ஆனால் கதை சிறியது.

  2. இதற்கு முன்னர் கதை எழுதிய அனுபவம் உண்டா?
    அம்புலிமாமாவில் வந்த கதையை பெயர் மாற்றி பாடசாலை சஞ்சிகைக்கு எழுதிய அனுபவம் உண்டு.

  3. ஏன் இந்த விபரீத முயற்சி?
    என்னால் முடிந்தது... ;-)

  4. இது கற்பனைக் கதையா? உண்மைக் கதையா?
    கதை உண்மையானது, ஆனால் சில சம்பவங்கள் கற்பனையானவையாக இருக்கலாம்.

  5. உண்மை என்றால் யாருடைய கதை?
    திரு. நிமலபிரகாசன் என்பவருடையது.

  6. இதில் எந்தெந்த கதாபாத்திரங்கள் உண்மையானவை?
    அனேக பாத்திரங்கள் உண்மையானவையாவே இருக்கும், ஆனால் பெயர்கள் கற்பனையானவை.

  7. இதை எழுதும் எண்ணம் ஏன் ஏற்பட்டது?
    மறக்க நினைக்கும் சிலவற்றை நினைவில் வைத்திருக்க... ;-)

  8. இதை தொடர்ந்து எழுதும் எண்ணம் இருக்கிறதா?
    இப்போதைக்கு எண்ணம் இருக்கிறது. ஆனால் முடியுமா என்பது முடிந்த பின் தான் தெரியும்.

  9. நாங்கள் இதை வாசிக்கத்தான் வேண்டுமா?
    என் எழுத்தை வாசிப்பது உங்கள் தலையெழுத்து என்றால் வாசிக்கத்தான் வேண்டும்.

  10. வேறு சந்தேகங்கள் கேள்விகள் இருந்தால் கேட்கலாமா?
    கேட்கலாம், ஆனாலும் பதில் கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.
முதலாவது பாகத்துடன் விரைவில் சந்திக்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: my story

வெள்ளி, 10 ஏப்ரல், 2009 / 8:00 pm

சோதனைப் பதிவு